காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நயன்தாரா சொத்து மதிப்பு இவ்வளவா?

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்படம் - தன் தனியார் ஜெட் விமானத்தில் நயன்!

Published On :

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நாயகியாக மிகப்பெரிய வருகையை பதிவு செய்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.

ஒரு படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன் தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

சம்பாதிக்கும் பணத்தை தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நம்பகமான தொழில்களில் முதலீடும் செய்து வருகிறார். இதுபோக தன் சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார். 

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.