பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

அஜித்தின் விடாமுயற்சி குறித்து வெளியான புதிய தகவல்!

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2023, 2:10 pm IST

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு  அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.  

இந்த நிலையில், நேற்று சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும், தங்களுக்கு இப்படம் முக்கியமானது எனவும், இனி தாமதமாகாது என்றும் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலைக் கேட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.