மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னையின் பலப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறனர்.
இதையும் படிக்க: அமீர் கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித்!
இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் எக்ஸ் தள பக்கத்தில், “தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கின்போது வாரக்கணக்கில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் முழங்கால் அளவு நீரால் சூழப்படுவதுடன் 100 மணி நேரம் மின்சாரத் தடையையும் எதிர்கொள்கிறோம் என்பதே உண்மை. இப்பகுதி ஏரியோ அல்லது பள்ளமோ கிடையாது. சென்னையின் பல பகுதிகளை விட எங்கள் பகுதியில் நிறைய குளங்கள் நல்ல நிலையில் இருப்பதுடன் வெட்ட வெளி நிலங்களும் இருக்கின்றன. மிகச்சரியாகவே இதற்கு குளப்பாக்கம் எனப் பெயரிட்டிருக்கின்றனர். ஆனால், அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகத்தால் மழைநீரும் கழிவு நீரும் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதனாலேயே, ஒவ்வொரு முறையும் எங்கள் குடியிருப்புகளில் ஆறுபோல் மழைநீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடமே, ஒரு படகும் சில துடுப்புகளும் நிரந்தரமாக உள்ளன. என்னால் முடிந்த அளவுக்கு உதவி வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


