

மிக்ஜம் புயல் மழைச்சாரலில் விளையாடும் ஷிவானி நாராயணனின் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கவர்ச்சியான படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கிய ஷிவானி, சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் இவர் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியப்படமான ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார்.
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும், ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் ஒரு பாடலுக்கும் ஷிவானி நடித்தார். இவர் கடைசியாக பம்பர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘மனசுக்குள் ஒரு புயல்..’ என்கிற பாடலை இணைத்து மிக்ஜம் புயலின் போது மழைச்சாரலில் விளையாடும் விடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷிவானி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்த இரு தொடர்கள்!
தற்போது, இந்த விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.