கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது.
சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்தில் நடிகர் யஷ் நடித்ததுள்ளதை படத்தில் பணியாற்றிய பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான தீர்த்தா சுபாஷ் என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க: ஒரே நாளில் மோகன் லாலுடன் புகைப்படம் எடுத்த 6000 ரசிகர்கள்!
இந்நிலையில், உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இப்படம் முதல் நாள் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு ஆரம்பமாகிறது. மேலும், அம்மாநிலங்களில் டிக்கெட் விலையையும் அதிகரித்துள்ளனர்.
இதனால், சலார் இந்தாண்டின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. முதல்நாளுக்கான டிக்கெட் முன்பதிவு வாயிலாக மட்டும் இதுவரை இந்தியாவில் சலார் ரூ.12.25 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம் : மாா்ச் 9-இல் ‘ஸ்விட்ச்’ ஏலம் - ரிசா்வ் வங்கி

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

