புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

'உன்னை அறைஞ்சிருப்பேன்': ரவீனாவை கண்டித்த உறவினர்!

பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற ரவீனாவின் உறவினர் அவரை கண்டித்த விடியோ தற்போது வைரலாகியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 8:37 am

பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற ரவீனாவின் உறவினர் அவரை கண்டித்த விடியோ தற்போது வைரலாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். சென்ற வாரம் நடைபெற்ற மிட் வீக் எவிக்‌ஷனில் அனன்யா வெளியேற்றப்பட்டார்.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற வெளியேற்றத்தில் கூல் சுரேஷ் வெளியேறினார். இதுவரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்  உள்ளனர்.

இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ரவீனாவின் உறவினர் ஒருவர் ரவீனாவை கடுமையாக கண்டித்துள்ளார்.

ரவீன் உறவினர், “உன்னை அறைஞ்சிருப்பேன். அம்மா ஒத்துக்கிட்டாங்க எல்லார் கிட்டையும் சொல்ற.. மணிக்காக விளையாட நீ வரல, தனியா உக்காரவா நிகழ்ச்சிக்கு வந்தீங்க..” என பேசியுள்ளனர்.

மேலும், மணியுடனும் ரவீனாவின் உறவினர்  பேசியுள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.