பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமீரின் மாயவலை: முதல் பாடல் வெளியீடு எப்போது?

அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 10:25 am

DIN

அமீரின் மாயவலை படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அமீர், பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2009-ல் யோகி என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்திலும் அமீர் நடித்திருந்தார். இவர், மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைப் பிறகு அமீர் கதாநயாகனாக நடிக்கும் திரைப்படம் மாயவலை. இந்தப் படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

Story image

ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இந்தப் படத்தினை வெளியிடுகிறார். 

இப்படத்தின் டீசரை வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இதையும் படிக்க: சலார் 2-வது பாடல்!

இந்த நிலையில், மாயவலை படத்தின் முதல் பாடல் டிச. 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.