
ராஜமெளலி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி பான் இந்தியாவுக்கு பெயர் போனவர் ராஜமெளலி. இவரின் பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸின் மார்கெட் உயர்ந்தது. தொடர்ந்து, ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்டோர் உலகம் முழுவதும் புகழ்பெற்றனர்.
இதனால், ராஜமெளலியின் படங்களில் நடிக்க திரையுலகின் முன்னணி நடிகர் - நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது மகேஷ் பாபுவை ராஜமெளலி இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் மற்றும் ராஜமெளலி கலந்து கொண்டனர். பின், இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | நடிகருடன் ராஷ்மிகாவின் ரகசிய காதல்: காட்டிக்கொடுத்த நீச்சல்குள புகைப்படம்
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2, மணிரத்னம், பா.ரஞ்சித், மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் என வரிசையாக பல்வேறு இயக்குநர்களுடன் கமல் இணைய உள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...