துணிவு வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இன்னும் இரு படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிக்க: நாளை வெளியாகிறது வாரிசு டிரைலர்?
அதேநேரம், துணிவு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
துணிவு படம் ஜன.12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் இன்று விஜய்யின் வாரிசு பட டிரைலரும் வெளியாகும் என்பதால் அதனை பார்த்தபின் துணிவு வெளியீட்டுத் தேதியை போனி கபூர் உறுதிசெய்வார் எனத் தகவல் வெளியானது.
தற்போது, வாரிசு திரைப்படம் ஜன.12 ஆம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதி என்கிற நிலையில் துணிவு படத்தை ஒருநாள் முன்பாக ஜன.11 ஆம் தேதி வெளியிட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியானால் முதல்நாள் வசூல் குறையும் என்பதால் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவை வெளியிட ஏற்பாடு நடந்துவருவதாகவும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும் நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



