தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து நடிகையாக பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பின்னர் முக்கியமான நடிகையாக உருமாறியுள்ளார்.
தற்போது அவரிடம் 9 படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அகிலன், பத்து தல, ருத்ரன், டீமாண்டி காலணி 2, கல்யாணும் காமினியும், பொம்மை, இந்தியன் 2, பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றும் இதில் அடங்கும். இதில் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில் அவர் நடித்த தெலுங்குப் படமான ‘கல்யாணும் காமினியும்’ படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தினை அமில்குமார் இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரியா பவானி சங்கருடன் சந்தோஷ் சோபன் நடித்துள்ளார். இசை- ஸ்ரவன் பரத்வாஜ்.
இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் யு கிடைத்துள்ளது. ஜனவரி 12ஆம் நாள் சங்கராத்திரியை முன்னிட்டு தெலுங்கில் வெளியாகிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு தெலுங்குப் பதிப்பு (வாரசுடு) ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அநேகமாக ஜனவரி 12, அல்லது 14 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்க: விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!