2012இல் மிஸ்கின் இயக்கத்தில் தமிழில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் பூஜா. சமீபத்தில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!
தற்போது ஹிந்தி படத்தில் சல்மான் கானுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் சல்மான்கானுடன் இருவருக்கும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் தீயாய் பரவின. சல்மான் கான் பிறந்தநாள் விழாவிலும் பூஜா கலந்துக் கொண்டார். மேலும் பூஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சல்மான் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
இந்நிலையில், பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தினை பகிர்ந்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதில் விஷமத்தனமாக ரசிகர் ஒருவர், “நீங்கள் சல்மான் கானுடன் எப்போது திருமணம் செய்வீர்கள்?” என கமெண்டில் கேள்வி கேட்டுள்ளார்.