நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

அஜித்துடன் இணையும் சந்தானம்?

நடிகர் அஜித்துடன் சந்தானம் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:11 am IST

நடிகர் அஜித்துடன் சந்தானம் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைகொடுக்கவில்லை.

இதனால்,  அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தில் நடிகர் சந்தானம் மீண்டும் கமெடியனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வீரம் படத்தில் அஜித்துடன் சந்தானம் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.