
பிக் பாஸ் தொலைக்காட்சி மூலமாகப் பிரபலமான நடிகை யாஷிகா, சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்றார் யாஷிகா. அப்போது மகாபலிரபும் அருகே யாஷிகாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் கடமையை செய் படத்தில் நடித்திருந்தார்.
கே. மனோகரனின் ‘மார்ஸ் புரடக்ஷன்’ தயாரிப்பில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சைத்ரா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை எம். ஜெனித்குமார் எழுதி இயக்குகிறார். இசை - பிராபகரன் மெய்யப்பன், ஒளிப்பதிவு - சதீஷ் குமார். எடிட்டிங்- எலிசா.
படக்குழு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...