
தன்னை கோயிலுக்குள் விட மறுத்ததாக பிரபல நடிகை அமலா பால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பின் மெல்ல மெல்ல தன் மார்க்கெட்டை இழந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: மோகன்லால் - கமல்ஹாசன் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
இந்நிலையில், நடிகை அமலா பால், ‘கேரளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவ கோயிலுக்குள் தன்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என்றும் 2023-லும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடுகள் இருப்பது வருத்தத்தைத் தருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.