

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை (ஜனவரி 25) வெளியாகிறது.
இதையும் படிக்க: விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா மேயர்!
தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், பதான் திரைப்படம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக உள்ளதாகவும் அதிக நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் இதுதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.