முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படம் பயன்படுத்தத் தடை

நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமையக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வஸந்த் ரவி என ஓட்டுமொத்த நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதியின் சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்  நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல்  பயன்படுத்தி வருகிறார்கள். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனால்,  நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.