விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடர் சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 29ஆம் தேதி முதல் சனிக்கிழமையும் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகவுள்ளது. இதன்மூலம், விஜய் தொலைக்காட்சியில் சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் தொடர்களின் பட்டியலில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. அதற்கேற்ப திரைக்கதைகளையும் அமைத்து வருகிறது.
படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடருக்கும் எல்லா வயதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தத் தொடரில் கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத எஸ். குமரன் இயக்குகிறார்.
கடந்த ஜனவரி மாதம்முதல் இரவு 9.30 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பப்பட்டு வந்தது. ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து சனிக்கிழமையிலும் சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.