காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கலாட்டாக்காரன் - கிங்க் ஆஃப் கோதா முதல் பாடல் வெளியீடு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங்க் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

Published On :

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

தொடர்ந்து துல்கர் ’கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார்.  இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்காரன்’ பாடலின் லிரிக்கல் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் துல்கருடன் நடிகை ரித்திகா சிங் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.