16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இந்தியன் - 2 எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்: சித்தார்த்

இந்தியன் 2  ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட அதிகம் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Published On :

இந்தியன் 2  ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட அதிகம் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் சமீப படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அதன்பின், ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்புக்கு சென்றார்.

தற்போது,  இந்தியன் 2  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சித்தார்த், ‘என் குரு கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததை வாழ்நாள் வாய்ப்பாக நினைக்கிறேன். இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைவிட 10 மடங்கு அதிக பூர்த்தியைத் தரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.