நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘அன்றே கணித்த செல்வராகவன்’- வைரலாகும் ரசிகரின் ட்வீட்!

மயக்கம் என்ன படத்தை இயக்கிய இயக்குநர் செல்வராகவனுக்கு ரசிகரின் சுவாரசியமான ட்வீட் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

News image
Updated On :14 மார்ச் 2023, 2:00 pm

செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படம் 2011இல் வெளியானது. இதில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்தனர். ராம்ஜி ஒளிப்பதிவில் ஜி.வி. இசையமைத்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிடித்த படமாக மாறியது. குறிப்பாக இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இதில் புகைப்பட ஆர்வலராக இருக்கும் தனுஷ் முதலில் மூத்த புகைப்பட கலைஞரால் ஏமாற்றப்பட்டு பின்னர் கடைசியில் சிறந்த புகைப்படத்திற்கான் விருதினை வாங்குவார். 

யாமினி மாதிரி மாதிரி மனைவி வரவேண்டுமென பல இளைஞர்கள் அந்த நேரத்தில் புகழ்பெற்ற வசனங்களில் ஒன்று. இந்தப் படத்தில் புகைப்பட ஆர்வலரான தனுஷின் பெயர் கார்த்திக். இதே பெயரில் தற்போதுநேஷனல் ஜியாக்ரபி ஆண்டின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை வென்ற கார்த்திக் சுப்பிரமணியத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.  

Story image

இதைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர் இயக்குநர் செல்வராகவனை டேக் செய்து, “தலைவன் செல்வராகவன் மயக்கமென்ன படத்தில் ஹீரோவிற்கு இந்த பெயரை வைத்திருப்பார்” என பதிவிட்டு இருந்தார். உடன் நெருப்பு எமோஜிக்களும் கைக்கூப்பி வணங்கும் எமோஜிக்களும் இருந்தது. இந்த ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் லைக் செய்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.