பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

’சாகுந்தலம்’ புரமோஷன் பணிகளை துவங்கிய சமந்தா!

சாகுந்தலம் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை நடிகை சமந்தா துவங்கியுள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2023, 12:35 pm

சாகுந்தலம் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை நடிகை சமந்தா துவங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா. அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாகுந்தலம். இப்படத்தின் டிரைலர் ஜனவரி 9 ஆம் தேதி வெளியானது.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாபாத்திரத்தை அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார். தில்ராஜூ தயாரித்துள்ளார். 

கடந்தாண்டு நவம்பரில் வெளியாக வேண்டிய படம் பலமுறை தள்ளிப் போனது. தற்போது, ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், நடிகை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இப்படத்தின் புரமோஷன் பணிகள் ஸ்ரீ பெத்தம்மா தல்லி கோவிலிலிருந்து துவங்கியுள்ளது’ என விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, இன்ஸ்டாவில் அவர், ‘கடைசியாக இன்றுதான் சாகுந்தலம் படத்தினை பார்த்தேன். குணசேகரன் சார் நீங்கள் எனது இதயத்தை வென்றுவிட்டீர்கள். என்ன அழகான படம். நமது பாரம்பரியத்தின் மிகப்பெரிய காவியத்தை அன்புடன் எடுத்துள்ளீர்கள். குடும்பமாக இந்தப் படத்தினை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். குழந்தைகளே உங்கள் அனைவருக்கும் ரசிக்கும்படியான மாயாஜாலமான உலகம் இதிலுள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்காக தில் ராஜூ , நீலிமா இருவருக்கும் நன்றி. சாகுந்தலம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.