‘அயோத்தி’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். 

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன்  'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.  

அயோத்தி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அயோத்தி திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரைக்கு வந்து சில வாரங்களிலேயே இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com