கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மலையாளத்தில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் இதுதான்!

யூடியூப் தளத்தில் அதிகம் கேட்கப்பட்ட மலையாள பாடல் பட்டியலில்

News image
Updated On :4 மே 2023, 12:41 pm

DIN

யூடியூப் தளத்தில் அதிகம் கேட்கப்பட்ட மலையாள பாடல் பட்டியலில் ஹிரிதயம் படத்தில் இடம்பெற்ற தர்ஷனா பாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

மோகன்லால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ’ஜிமிக்கி கம்மல்’ பாடலே இதுவரை யூடியூபில் அதிகம் கேட்கப்பட்ட(110 மில்லியன் பார்வைகள்) மலையாளப் பாடலாக இருந்து வந்தது. 

இந்நிலையில், இப்பாடலின் சாதனையை மோகன்லால் மகன் முறியடித்துள்ளார். மோகன் லால் மகனான பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற ‘தர்ஷனா’ பாடல் யூடியூபில் 111 மில்லியன்(11 கோடி) பார்வைகளைக் கடந்து இதுவரை அதிகம் கேட்கப்பட்ட மலையாள பாடல் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.