சமந்தா படத்தினைவிட குறைவான வசூலில் நாக சைதன்யாவின் படம்?: ரசிகர்கள் கிண்டல்

சமந்தா படத்தினைவிட குறைவான வசூலில் நாக சைதன்யாவின் படம்?: ரசிகர்கள் கிண்டல்

நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள கஸ்டடி படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
Published on

நாக சைதன்யாவும் சமந்தாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர். 

சமந்தாவின் யசோதா திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவது ரூ.6.32 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள கஸ்டடி திரைப்படம் குறைவாக வசூலிட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிலர் ரூ.7 கோடி வசூலானதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். 

இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சமந்தாவை விட குறைவாக வசூலிட்டியுள்ளதாக நாக சைதன்யாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியானால்தான் தெரியும் என நாக சைதன்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com