லியோ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த வெற்றி விழா நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை ஒப்பிட்டு நான்தான் நம்பர்.1 எனப் பேசியிருப்பார். லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் வெற்றி விழாவில் இது குறித்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.
விஜய் கூறிய குட்டி ஸ்டோரி:
ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு செல்கிறார்கள். அந்தக் காட்டில் யானை, சிங்கம், புலி, காக்கா, கழுகு...அதான்பா காக்கா, கழுகு... காடு என்றால் இதெல்லாம் இருக்கும் இல்லையா.. (மக்கள் ஆர்பரித்தார்கள். சிரித்துக் கொண்டே சிறிது இடைவெளிவிட்டு தொடர்கிறார்). அதில் இருவரில் ஒருவர் வில் அம்பு, இன்னொருவர் ஈட்டியையும் கொண்டு செல்கிறார். அம்பு கொண்டு சென்றவர் ஒரு முயலை அடித்து தூக்கிவிட்டார். ஈட்டி கொண்டு சென்றவர் யானையை கொல்ல முயற்சித்து முயற்சித்து தோல்வி அடைவார். இதில் யார் வெற்றியாளர்?. எது கெத்து? எளிதாக அடைய முடிவதை அடைவதில் என்ன இருக்கிறது. எது கடினமோ அதை முயன்று வெல்வதில்தான் முக்கியம். போட்டி இடுவதே வெற்றிதான்.
பாரதியார் சொன்னதுபோல பெரிதுனும் பெரிது கேள். சிறிய ஆசைகள் குற்றம் என்கிறார்கள். அதனால் பெரிதாக ஆசைப்படுங்கள். எதுவும் தவறில்லை.
எனது ரசிகர்கள் முட்டாள்கள் இல்லை. சினிமாவை சினிமாவாக பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அப்படித்தான். நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டதை விட்டுவிடுங்கள். எனது ரசிகர்களும் அப்படித்தான். எதை எடுப்பது எதை விடுவது என எனது ரசிகர்களுக்கு தெரியும். அவர்கள் வேற ரகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


