பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நல்ல கதாபாத்திரத்திற்குக் காத்திருக்கும் ஷ்ரேயா ரெட்டி!

நடிகை ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைக் கேட்டு வருகிறார்.

News image
Updated On :17 நவம்பர் 2023, 6:15 am

சில நடிகைகள் தோற்றத்திலேயே தங்கள் ஆளுமையைக் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் மிக உறுதியான பெண் என்கிற அடையாளத்துடன் கேமராவில் தோன்றக்கூடிய நடிகை ஷ்ரேயா ரெட்டி. 

விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் ஷ்ரேயா. அதன் பிறகு வெயில், காஞ்சிவரம் உள்ளிட்ட சில படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்தவர் திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகினார். 

Story image

மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பின்  சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் நடிப்பில் தமிழில் ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. தற்போது, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே ஷ்ரேயா தேர்ந்தெடுத்து வருகிறாராம். சிறிய வேடமாக இருந்தாலும் தன் நடிப்பு தனியாகத் தெரிய வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பவருக்கு சலார் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.