தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

வெளியானது சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’ டிரைலர்! 

நடிகர் சந்தானம் நடித்துள்ள 80ஸ் பில்டப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:52 am IST

முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான கிக் படத்தினை தவிர்த்து தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இந்த நிலையில், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ள படம் ‘80-ஸ் பில்டப்’. இதில்தான் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக தொடர் பிரபலம் ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். 

Story image

ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. நவ.24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Story image

80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, ஃபேன்டசி டிராமாவாக உருவாகி வருகிறது. 18 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.