சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

வசூலில் அசத்தும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன.

இப்படம் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 100 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

Story image

இந்நிலையில்,  இப்படம் வெளியான 10 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் எந்தப் பெரிய படங்களும் இல்லாததால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.