யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தன. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லியோ: தகாத சொல்லும் ரசிகர்களின் அட்டகாசமும் - யார் பொறுப்பு?
இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹார்ட்டின் வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



