லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் வியாழக்கிழமை தரிசனம் செய்தார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்?
மேலும், லியோ படத்திலிருந்து வெளியாகியுள்ள மூன்று பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், லியோ படம் வெற்றி பெற வேண்டி தனது படக்குழுவுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி மலையேறி வியாழக்கிழமை காலை சாமி தரிசனம் செய்துள்ளார்.
இணையத்தில் லோகேஷ் கனகராஜின் காணொலிகளும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



