இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

வேல ராமமூர்த்தி வந்த பிறகு எதிர்நீச்சல் பெற்ற டிஆர்பி!

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட எதிர்நீச்சல் தொடர் அதிக டிஆர்பி பெற்றுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:38 am IST

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கத்தொடங்கிய பிறகு எதிர்நீச்சல் டிஆர்பி வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால், எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டிருந்தது. இதனிடையே இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட எதிர்நீச்சல் தொடர் அதிக டிஆர்பி பெற்றுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடரில் ஆதிகுணசேகரன் பாத்திரம் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்துள்ளது. இந்த பாத்திரத்தில் நடித்துவந்த நடிகர் மாரிமுத்து மறைந்த பிறகு, அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி மாற்றப்பட்டார். 

ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி

ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி

தற்போது ஆதி குணசேகரன் பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்துவருகிறார். இவர் நடிக்கத் தொடங்கிய பிறகு எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி வெளியாகியுள்ளது. 

ஆதி குணசேகரனாக நக்கல் கலந்த வில்லத்தனத்துடன் நடிக்கும் மாரிமுத்து இடத்தை வேறு எந்த நடிகராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவியது. அதனை உண்மையாக்கும் வகையிலேயே வேல ராமமூர்த்தியின் நடிப்பும் அமைந்துள்ளது. கோபக்கார குணசேகரன் வருகிறாரே தவிர நக்கல், நையாண்டி கலந்த குணசேகரன் வேல ராமமூர்த்தியிடம் இயல்பாக வெளிப்படவில்லை.

Story image

இதனிடையே இந்த வாரம் வெளியான டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் 11.54 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது மற்ற வாரங்களில் எதிர்நீச்சல் பெற்ற டிஆர்பியை விட அதிகம். (விஜய் தொலைக்காட்சியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் -7 நிகழ்ச்சி 4.17 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.)

குறிப்பாக மாரிமுத்து நடிக்கும்போது பெரும்பாலும் 10 புள்ளிகளுக்கு மேல் மட்டுமே எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி பெற்றுவந்தது. ஆனால், வேல ராமமூர்த்திக்கு பிறகு தற்போது 11.54 புள்ளிகளை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது. 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் வருவதாலும், புதிய ஆதி குணசேகரனாக வரும் வேல ராமமூர்த்தியின் நடிப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்க்கும் ஆர்வமிகுதியாலும் இந்த வாரம் எதிர்நீச்சல் தொடர் அதிக டிஆர்பியை பெற்றுள்ளது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.