விஜய் சேதுபதியின் புதிய தோற்றம்: எந்தப் படத்துக்காக? 

விஜய் சேதுபதியின் புதிய தோற்றம்: எந்தப் படத்துக்காக? 

புதிய தோற்றத்துடன் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
Published on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் நாயகன் என்ற பிம்பம் இல்லாமலும் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். 

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமீரின் உணவகத்தை தொடக்கி வைக்க வந்தபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது மிஷ்கின் படத்துக்காகவா அல்லது விடுதலை 2 படத்துக்காவா எனத் தெரியவில்லை. 

விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் படத்திலும் வெற்றிமாறன் படத்திலும் நடித்து வருகிறார்.  அவரது மெரி கிறிஸ்துமஸ் படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com