பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் வீடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி தொடங்கியது முதல் இரு வீட்டாருக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு ரசிகர்களை பரபரப்பில் வைத்துள்ளனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டில் நுழையும் 5 பேர் யார்?
இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா உள்ளிட்டோர் வெளியேறியுள்ளனர்.
நான்கு வாரம் முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த வாரம் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழையவுள்ளதாக அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியிடப்பட்டிருந்தது.
வார இறுதி நாள் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் இன்று தொகுத்து வழங்கியுள்ளார். அதன், முதல் பாதி நிகழ்வு இன்று ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸில் இருந்து இந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று எவிக்ஷனில் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் நிகழ்வில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை கமல் அறிமுகம் செய்யவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
இணையத்தில் வைரலாகும் வாரணாசி செட்!

காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

