
சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்கான தொடரை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் டபிள்யூடபிள்யூஈ(WWE) மல்யுத்தப் போட்டி.
இதில், மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, ஜான் சீனாவை சந்தித்ததுடன், “ ஜான் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில நிமிடங்களில் நீங்கள் அனைவரையும் சிறப்பாக உணரவைத்தது அற்புதம்.” என தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: ஜவான் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சோனி ஸ்போர்ட்ஸ் நடத்தும் இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கான இந்திய விளம்பரத் தூதர் நடிகர் கார்த்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.