தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெளியானது உபேந்திராவின் வித்தியாசமான புதிய பட டீசர்! 

பிரபல கன்னட நடிகரும் இயக்குநருமான உபேந்திராவின் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 2:37 pm

DIN

1992இல் தர்லே நன் மகா எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் உபேந்திரா.  பின்னர் அவர் ஷிவ ராஜ்குமாரை வைத்து இயக்கிய ஓம் திரைப்படம் கன்னடத்தில் புதிய அலையை ஏற்படுத்தியது. பின்னர் நடிகராகவும் இயக்குநராகவும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். 

Story image

நடிகர். இயக்குநர், பாடலாசிரியர் மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் தனது பயணத்தை அமைத்துக்கொண்டுள்ளார் உபேந்திரா. யுபிபி எனும் உத்தம பிரஜாகிய கட்சியினை 2018இல் உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

Story image

2023இல் அவர் கப்ஜா படத்தில் நடித்திருந்தார். த்ரிசூலம், புத்திவந்தா2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ஒருவாரம் முன்பு டீசர் அப்டேட் கேட்டவர்களுக்கு, “டீசர் பார்க்காமல் படம் பார்த்தால்தான் நன்றாக இருக்கும்” எனக் கூறியிருந்த விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தானே இயக்கி நடித்துள்ள பான் இந்திய படமான யுஐ எனும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இந்த டீசர் வழக்கமான ஒன்றாக இல்லை. விஷுவல்ஸ் இன்றி சப்தங்களோடு மட்டுமெ வெளியாகியுள்ளது. இந்த டீசர் உங்கள் கற்பனைக்கு என முடிகிறது. 

நடிகர் உபேந்திரா பிறந்தநாளில் வெளியான இந்த டீசரினால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.