பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் அகிலன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் புஷ்பராஜ். இவர் சினிமா வாய்ப்பு காரணமாக அத்தொடரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிந்து இருந்தார். மேலும், ஒரு இணையத் தொடரிலும் நடித்து உள்ளார்.
நீண்ட நாள்களாக காதலித்த வந்த அக்ஷயா என்பவரை புஷ்பராஜ் கரம் பிடித்தார். இவர்கள் திருமணம் செப். 14 ஆம் தேதி நடைபெற்றது.
இவர்களுக்கு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்ட சீரியல் நடிகை!
தங்களது திருமணப் புகைப்படங்களை நடிகர் புஷ்பராஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.