விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடரில் நடிக்கும் நாயகி தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்தவகையில் முத்தழகு தொடர் இல்லத்தர்சிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நாள்தோறும் உணவுக்கே உழைத்து கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், தலைமுறை தலைமுறையாக செல்வந்தனாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொள்கிறார். அவர்கள் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதே முத்தழகு கதை.
இந்தத் தொடரில் திருமண காட்சியொன்றில், நாயகன் தாலி கட்டுவதற்கு முன்பு, நாயகி தானாக தாலிக்கு முடிச்சிட்டு கழுத்தில் மாட்டிக்கொள்ளும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
டிக்-டாக் மூலம் பிரலமான ஷோபனா முத்தழகு தொடரில் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்கிறார். அவர்களுடன் லஷ்மி வாசுதேவன், ஷாலினி ராஜன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.