தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆண் குழந்தைக்கு தந்தையான பிரபல சீரியல் நடிகர்!

பிரபல சீரியல் நடிகரான புவியரசுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 10:22 am

DIN

பிரபல சீரியல் நடிகரான புவியரசுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இதயம் மற்றும் வித்யா நம்பவர் 1 தொடரில் நடித்து வருபவர் நடிகர் புவியரசு. இவர் பல முன்னனி தொடர்களில் நடித்து அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.

தொடர்ந்து, தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மோஹனபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

Story image

சமீபத்தில், இவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில், மெட்டர்னடி போட்டோ ஷூட்டில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில், நடிகர் புவியரசு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அந்தப் பதிவில், "உன்னுடைய பிஞ்சு விரலை என்னிடத்தில் வைத்திருப்பது போல், விலைமதிப்பானது எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நெகிழ்ச்சியான பதிவுக்கு, புவியரசு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.