வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிக் பாஸ் பாலாஜிக்கு ரகசிய திருமணமா?

பிக் பாஸ் பாலாஜிக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 7:11 am

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பாலாஜி முருகதாஸ் பங்கேற்று 2 ஆம் இடத்தைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கெடுத்த பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வென்றார்.

இதன் மூலம் பிரபலமான பாலாஜி, சில திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பாலாஜி முருகதாஸ் தனது இண்டாகிராம் பக்கத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், ரசிகர்களுக்கு கூற மறந்து விட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் திருமண மேடையில் இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இப்பதிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் பாலாஜிக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அவர் வெளியிட்ட புகைப்படம் திரைப்பட ப்ரோமோஷனாக எடுக்கப்பட்ட புகைப்படம் போல தெரிவதால், பாலாஜி முருகதாஸை அவரது ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.