தமிழில் ஹனுமான்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஹனுமான் திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் ஓடிடி வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.
தமிழில் ஹனுமான்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான்.

தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் திரைப்படம் உலகளவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

தமிழில் ஹனுமான்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
விரைவில் டாக்ஸிக் படப்பிடிப்பு!

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீமதி சைதன்யா இப்படத்தை வழங்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜன. 12 ஆம் தேதி வெளியானது.

இதனிடையே, ஹனுமான் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஜீ5 ஓடிடி தளத்தில் முன்னதாக வெளியானது.

இந்த நிலையில், ஹனுமான் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடத்தில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com