ரூ.8 கோடிக்கு சொகுசுக் கார் வாங்கிய ரன்பீர் கபூர்!

நடிகர் ரன்பீர் கபூர் விலை உயர்ந்த சொகுசுக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
மனைவி, மகளுடன் ரன்பீர்!
மனைவி, மகளுடன் ரன்பீர்!

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் அனிமல் படத்தில் சிறப்பாக நடித்து பெரிய கவனம் பெற்றார். அனிமலும் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவரும் நடிகை ஆலியா பட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த இணைக்கு ராகா என்கிற மகள் இருக்கிறார்.

மனைவி, மகளுடன் ரன்பீர்!
ரஜினி - 171 பெயர் டீசர் படப்பிடிப்பு!

ரன்பீரும் ஆலியாவும் இணைந்து தங்கள் முதலீட்டில் மும்பையில் ராகாவின் பெயரில் ரூ.250 கோடிக்கு பங்களா ஒன்றைக் கட்டி வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் வைத்திருக்கும் பங்களாவை ஒப்பிடும்போது இதுதான் மிகப்பெரிய வீடாக உருவாகிறது.

இந்த நிலையில், கார் பிரியரான ரன்பீர் கபூர் ரூ.8 கோடி மதிப்புள்ள பெண்ட்லி (bentley) வகைக் கார் ஒன்றைப் புதிதாக வாங்கியுள்ளார்.

பெரும்பாலான பெண்ட்லி கார்கள் இயந்திர உதவியால் உற்பத்தி செய்யப்படமால், பொறியாளர்களின் கைகளாலேயே உருவாக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com