/

வணங்கானுக்குப் பிறகு இந்தப் படம்தான்: அருண் விஜய் நெகிழ்ச்சி!

நடிகர் அருண் விஜய் தான் நடிக்கும் 36வது படத்தின் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் .

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:18 am

DIN

நடிகர் அருண் விஜய் தான் நடிக்கும் 36வது படத்தின் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் .

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார்.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. பின்னர் தடம், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படமும் சிறப்பான வரவேற்பினை பெற்றது.

பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே நடித்துள்ள பார்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில் தனது 36வது படத்தின் பூஜை புகைப்படங்களைப் பதிவிட்டு நெகிழ்சியாக பதிவிட்டுள்ளார். அதில் அருண் விஜய் கூறியதாவது:

வணங்கான் படத்துக்குப் பிறகு இளமையான, அறிவான, அதிரவைக்கும் குழுவுடன் அருண்விஜய் 36 படத்தின் பூஜை உங்களது ஆசியுடனும் வாழ்த்துகளுடன் நேற்று தொடங்கியது. பிடிஜி யுனிவர்ஸ் தயாரிப்பாளருடன் இணைவதில் மகிழ்ச்சி. ஆர்வமான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்.

இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.