ராஷ்மிகா பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளில் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன.

அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

ராஷ்மிகா மந்தனா நடிகர்கள் அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ராஷ்மிகா பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!
சினிமாவை விட வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்: திருமணத்துக்குப் பிறகு டாப்ஸியின் முதல் நேர்காணல்!

தற்போது ராஷ்மிகாவின் 28வது பிறந்த நாளை முன்னிட்டு கீதா ஆர்ட்ஸ் வழங்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தி கேர்ள்பிரண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை ராகுல் ரவீந்தின் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு இதன் படத்தலைப்பு அறிவிப்பு டீசர் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!
தெலுங்கு படங்களில் நடிப்பதை கைவிட நினைத்தேன்: மிருணாள் தாக்குர் அதிர்ச்சி தகவல்!

ராஷ்மிகா தற்போது புஷ்பா-2 படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com