மஞ்ஞுமெல் பாய்ஸ் ஓடிடியில் எப்போது?
மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்ஞுமெல் பாய்ஸ் திரைப்படம் கட்ந்த பிப்.23 ஆம் தேதி திரையரங்களில் வெளியானது.
இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
இப்படம் உலகளவில் ரூ.225 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் மே 3 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...