வண்டி இல்லாததால் சைக்கிளில் சென்றேன்: நடிகர் விஷால்
சேலம் தனியார் கல்லூரியில் நடிகர் விஷால் நடித்து ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ரத்னம் திரைப்படத்தின் படக்குழுவினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரைப்பட நடிகர் விஷால் கலந்துகொண்டு கல்லூரி மாணவ - மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ரத்னம் திரைப்படத்தின் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஷால் உரையாற்றினார் அப்போது அவர் பேசியது,
"8 ஆண்டுக்குப் பிறகு இயக்குநர் ஹரி படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் ஹரி தற்போது மிகவும் அப்டேட் ஆகிவிட்டார். இதற்கு முன்பாக நான் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று பல சொன்னார்கள்; ஆனால் நம்பிக்கையுடன் நடித்து படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் நடக்கும். நடிகர் சங்க கட்டடப் பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது." என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வாக்களிக்க சைக்கிளிலில் விஜய்யை பின்பற்றி வந்தீர்களா என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ,
"விஜய் மாதிரி சைக்கிள் ஓட்டிக்கொண்டு போகவில்லை; என்னிடம் வண்டியில்லை, சென்னை போக்குவரத்தில் வாகனம் ஓட்டுவது சிரமம்; சைக்கிள் இருந்தால் வேகமாக சென்று விடலாம் என்பதால் சைக்கிள் வாங்கினேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.