
சினிமா ரசிகர்கள் தற்போதுள்ள சூழலில் திரையரங்குகளுக்கு சென்று படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.
திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடித்த ஃபேமலி ஸ்டார் திரைப்படம் அமேசான் ப்ரைமில் ஏப். 26 -ல் வெளியாகிறது.
திரவ், பானு, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான வெப்பம் குளிர் மழை திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கோபிசந்திரனின் பீமா திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
அனுபமா பரமேஸ்வரனின் தில்லு ஸ்கொயர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஏப். 26 ஆம் தேதி வெளியாகிறது.
ஹிந்தி மொழிப் படமான வித்யூத் ஜம்வாலின் க்ராக் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
தில் தோஸ்தி தில்லெம்மா இணையத் தொடர் அமேசான் ப்ரைமிலும், ஹார்ட் பீட் இணையத் தொடர் ஹாட் ஸ்டாரிலும் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.