தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அரண்மனை 4 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை நடிகை தமன்னா பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 10:57 am

DIN

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதன் வெற்றி காரணமாக, ’அரண்மனை - 2’ திரைப்படத்தை 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.

பின்னர் இந்தப்படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021-ல் ’அரண்மனை - 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ’அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Story image

இந்நிலையில் நடிகை தமன்னா படப்பிடிப்பில் எடுத்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், “சிறிது சவாலாக இருந்தாலும் இதில் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகள் அனைத்தையும் நானே செய்தேன். இந்த அரண்மனை பாகத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. இதை விடவும் சிறந்த குழு அமையாது” எனக் கூறியுள்ளார். மே.3ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

மே.3ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தமன்னா தற்பொது ஒடேலா 2 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.