குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!
வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com