சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவுக்கு வந்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
தொடக்கத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், இடையில் சற்று டிஆர்பியை இழந்தாலும், ஜீ தமிழ் முதன்மை தொடர்களில் இன்றாக நீடித்து வந்தது.
கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வைக்கப் போராடுகிறார். 4 மகள்களும் தங்களின் கல்லூரி, திருமண வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அந்த சவால்களைக் கடந்து லட்சியங்களை அப்பெண்கள் அடைவதே மீனாட்சி பொண்ணுங்க தொடரின் கதை.
இத்தொடரில் நடிகை செளந்தர்யா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்திருந்தார். இவர்களுடன் பிரனிகா தக்ஷு, சசிலயா, ஆனந்த் மெளலி, சுபத்ரா, பிரபாகரன், சுகன்யா, ஹேமாதயாள், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவந்த இந்தத் தொடர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஒளிபரப்புடன் முடிந்தது. இதில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நாயகி சக்தி, ஐஏஎஸ் ஆவதைப் போன்று தொடர் நிறைவு பெற்றது.