ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நான் நிர்வாணமாக நிற்கவும் தயார்... கொட்டுக்காளியைப் பாராட்டிய மிஷ்கின்!

Published On :13 ஆகஸ்ட் 2024, 1:50 pm IST

இயக்குநர் மிஷ்கின் கொட்டுக்காளி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர்கள் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கிய இப்படம் வருகிற ஆக.23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதன், டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “வினோத் ராஜ் என்னை சந்தித்தபோது கூழாங்கல் வெளியாகவில்லை. அடுத்ததாக, என்ன படம் எடுக்கப்போகிறாய் என கேட்டேன். கொட்டுக்காளியை எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறி, இசையமைப்பாளர் என யாரும் இப்படத்திற்கு இல்லை என்றார். அப்போது, வினோத்தை மிகவும் திமிர்பிடித்தவன் என நினைத்தேன்.

கொட்டுக்காளி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து பேய் பிடித்ததுபோல் இருக்கிறேன். தன் படத்தை வைத்தே அவன் என்னை செருப்பால் அடித்துவிட்டான். இந்தப் படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நான் நிர்வாணமாக நிற்கவும், நடனமாடவும் தயார். இப்படத்தில், சூரியைத் தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது.

இந்தப் படத்திற்குப் பிறகு சூரியை மிகச்சிறந்த நடிகராக பார்க்கலாம். கொட்டுக்காளி பெரிய அனுபவம். இதைத் தயாரித்த, நடிகர் சிவகார்த்திகேயன் கொண்டாடப்பட வேண்டியவர். தெய்வத்தன்மையும் தாய்மையும் கொண்ட இப்படத்தை நாம் கைவிடக்கூடாது” என புகழ்ந்து பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.